தொடர்ந்து ஏறும் பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் அவதி

0
163
சென்னை,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்று அச்சம் ஏற்பட்டது. எரிபொருட்கள் விலை உயர்வால் லாரிகளின் வாடகைகள் உயர்ந்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களுக்கு கடும் அதிருப்தியை அளித்த நிலையில், விலை குறைக்கும் முயற்சியாக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை அண்மையில் ரூ.2.50 குறைத்தது. மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து மக்களின் சுமையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதன்படி, பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் வரை குறைக்கப்பட்டது. இருப்பினும், பெட்ரோல், டீசல் விலை குறைந்தபாடில்லை. தொடர்ந்து எண்ணைய் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றன. இது வாகன ஓட்டிகளை விழி பிதுங்க வைத்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்து ரூ.85.61 ஆகவும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் அதிகரித்து 78.90 ஆகவும் விற்பனையாகிறது.