தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டது : இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

0
207

17வது மக்களவை மற்றும் நான்கு மாநிலங்களின் தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதுதொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், மக்களவை மற்றும் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.