கிணத்துக்கடவு : பொள்ளாச்சி — கோவை தேசிய நெடுஞ்சாலையில், சர்வீஸ் ரோட்டோரத்தில் சேதமடைந்த இரும்பு தடுப்புகளை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
பொள்ளாச்சி — கோவை தேசிய நெடுஞ்சாலையில், முக்கிய பகுதிகளில் சர்வீஸ் ரோட்டின் ஓரம் மற்றும் மக்கள் செல்லும் நடைபாதை அருகே, இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், கிணத்துக்கடவு செக்போஸ்ட் முதல் கோவில்பாளையம் வரை பல இடங்களில் ஆங்காங்கே ரோட்டோர தடுப்புகள் சேதமடைந்து வளைந்து உள்ளது. சில இடங்களில் சேதம் அடைத்த தடுப்புகள் அகற்றம் செய்யப்பட்டு, மீண்டும் சீரமைக்காமல் அப்படியே உள்ளது.
விபத்து ஏற்படும் அபாயம்
இதில், ஒரு சில பகுதியில் மட்டும் சேதமடைந்த தடுப்பு வளைந்து நெளிந்து காணப்படுகிறது. இதனால், ரோட்டோரம் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் மீது இரும்பு தடுப்பு உரசுகிறது. இதனால் வாகன விபத்து ஏற்படுவதுடன், நடந்து செல்லும் பாதசாரிகள் காயமடைகின்றனர்.
இதே போன்று, சில சென்டர் மீடியன் பகுதியில் வாகன விபத்து ஏற்பட்டு வளைந்துள்ளது. இப்பகுதியில் ரோட்டை கடக்க முயற்சிக்கும் சிலர் தடுமாறி கீழே விழுகின்றனர்.
எனவே, வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், சேதமடைந்த இரும்பு தடுப்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.