தேசிய திறனாய்வு தேர்வு 6,663 மாணவர்கள் பங்கேற்பு

0
6

கோவை: பள்ளி மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வை, 6663 பேர் எழுதினர்

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு(என்.எம்.எம்.எஸ்.,) ஆண்டு தோறும்

நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்காக, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டது.

தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மாதம் ரூ.1000 வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். பிளஸ் 2 வரை படித்து முடிக்கும் வரை, இவ்வுதவித்தொகை வழங்கப்படும்.

2024 – 25ம் ஆண்டுக்கான தேர்வு நேற்று நடந்தது. பொள்ளாச்சியில் 7, கோவையில், 19 என, மாவட்டத்தில், 26 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வை எழுத, 6,797 மாணவர்கள் தகுதி பெற்றனர். 6,663 பேர் எழுதினர். 134 பேர் ஆப்சென்ட் ஆகினர்.