மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 17-வது யூத் அத்லெடிக் சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டி கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் கோவை நிர்மலா கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி திவ்யஸ்ரீ பங்கேற்று 18 வயதுக்கு உட்பட்ட பிரிவின் நடந்த மும்முறை தாண்டுதல் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.
மேலும் நீளம் தாண்டுதல் போட்டியில் 2-வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் அவர் அடுத்த மாதம் (அக்டோபர்) குவைத்தில் நடக்கும் ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளார். அவருக்கு கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.