தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

0
92

பொள்ளாச்சி-திருப்பூர் சாலையானது புளியம்பட்டியில் இருந்து நெகமம் சின்னேரிபாளையம் வரை அகலப்படுத்தப்பட்டது. இங்கு வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. இந்தநிலையில் தற்போது மழை பெய்து வருவதால் பொள்ளாச்சி-திருப்பூர் சாலையில் ராசக்காபாளையம், கரப்பாடி பிரிவு, தொப்பம்பட்டி, வாய்க்கால் மேடு, கள்ளிப்பட்டி பிரிவு ஆகிய இடங்களில் தாழ்வாக பகுதி இருப்பதால் அதிகளவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் நிலைதடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. எனவே சாலையில் தேங்கும் மழைநீர் வழிந்தோட வழிவகை ஏற்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.