நெகமம் அருகே பொள்ளாச்சி-திருப்பூர் சாலையில் ராசக்காபாளையம் பிரிவில் தேங்காய் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்பகுதியில் சாலையோரத்தில் இருந்த குட்டையின் தடுப்புச்சுவர் மீது லாரி எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கவிழ்ந்த லாரியில் இருந்த தேங்காய்கள் மாற்று லாரியில் ஏற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.