பீஜிங்
தென் சீனக்கடல் பகுதி, எண்ணெய், இயற்கை எரிவாயு வளமிக்க பகுதி ஆகும். இங்கு சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. செயற்கை தீவுகளை அமைத்து, ராணுவ மயமாக்கி வருகிறது. ஆனால் தென் சீனக்கடல் பகுதியில் தங்களுக்கும் பங்கு இருப்பதாக சொல்லி, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் ஆகிய நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன.
அமெரிக்க போர்க்கப்பல் இன்று தென் சீனக் கடற்பகுதிக்கு அருகேயுள்ள கடல் பகுதி அருகே சென்றது, அதனால் பல வாரங்களுக்கு பின்னர் மீண்டும் அந்த பகுதியில் இராணுவ பதற்ற்ம் ஏற்பட்டது.
தென்சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதி அருகே அமெரிக்காவின் நாசகார போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். டிகாட்டர் பயணம் மேற்கொண்டது. அதை சீன போர் கப்பல் நெருங்கியதால் பதற்றம் ஏற்பட்டது. அமெரிக்க போர்க்கப்பலை எச்சரிக்கத்தான் சீன போர்க்கப்பல் அதை நெருங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
சீனாவின் பாதுகாப்பு மந்திரி அமெரிக்க டிகாட்டர் அதன் சுதந்திரமாக அந்த பகுதியில் பயணம் செய்திருக்கக்கூடாது என்றும், ஸ்ப்ரிட்லி தீவுகளில் இருந்து தூக்கி எறிவதற்கு ஒரு லுயங்-வர்க்கப் போர் கப்பல் உத்தரவுக்கு பெய்ஜிங்கை தூண்டிவிட்டது என்றும் கூறினார்.