தென்னை விவசாயத்தை மேம்படுத்த மத்திய அரசு உதவி செய்யும்

0
88

தமிழகத்தில் தென்னை விவசாயத்தை மேம்படுத்த மத்திய அரசு உதவி செய்யும் என்று கோவை வேளாண்மை பல்கலைக் கழகத் தில் நடைபெற்ற உழவர் தின விழாவில் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் பேசினார்.

உழவர் தின விழா

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் உழவர் தின விழா நடைபெற்றது. இதில், இதில் மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் இந்தியில் வரவேற்பு தெரிவித்து விட்டு தமிழில் பேசும் போது, விவசாயத்திற் கான மரியாதை, வருமானத்தை அதிகரிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் மூலமாக நிறைவேற்ற முடியும். மாநில அமைச்சர். மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு நிறைய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றார்.

கொப்பரை கொள்முதல்

இதைத்தொடர்ந்து பொள்ளாச்சி எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் பேசும் போது, தொழில் துறையில் மட்டுமல்ல, வேளாண் துறையிலும் கோவை முன்னோடி மாவட்டம். தற்போது தேங்காய், தேங்காய் மட்டை, கொப்பரைக்கு விலை இல்லை. ரூ.140 -க்கு விற்ற கொப்பரை தேங்காய்க்கு தற்போது ரூ.70 மட்டும் விலை கிடைக்கிறது.

ஆண்டிற்கு 8 முறை தேங்காய் பறிக்கப்படுகிறது. ஆனால் ஒரே ஒரு முறை மட்டுமே கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது. அதை மாற்றி எப்போதும் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும்.

தேங்காய் எண்ணெய் சாப்பிட கூடாது என்று தவறான கருத்து உள்ளது. அதை மாற்ற தேங்காய் எண்ணெய்யை உணவுக்கு பயன் படுத்தலாம் என்று மத்திய, மாநில அரசுகள் விளம்பரப்படுத்த வேண்டும் என்றார்.

மத்திய அரசு உதவும்

விழாவில், மத்திய வேளாண்மை துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பேசியதாவது:-

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பாதுகாப்பது மத்திய -மாநில அரசுகளின் பொறுப்பு. தென்னை விவசாயம், நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தேங்காய் உற்பத்தி யில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. அதில் தமிழகம், குறிப்பாக கோவை முக்கிய இடத்தில் இருக்கிறது. இந்தியா முழுவதும் 21 லட்சம் ஹெக்டேரில் தென்னை விவசா யம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் மட்டும் 28 ஆயிரம் ஹெக்டே ரில் தென்னை விவசாயம் நடைபெறுகிறது. தமிழகத்தில் தென்னை விவசாயத்தை மேம்படுத்த மத்திய அரசு உரிய உதவிகளை செய்யும்.

கடன் தொகை அதிகரிப்பு

தென்னை விவசாயம் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படுகிறது, அதற்கு உரிய இழப்பீடு மாநில அரசு மூலம் மத்திய அரசு கொடுக்கிறது.

கொரோனா நெருக்கடியின் போது பிரதமர் மோடியின் முயற்சியால் விவசாய தொழில் பாதுகாக்கப்பட்டது, உரிய இழப்பீடுகள் வழங்கப்பட்டது. கிஷான் கிரிடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கான கடன் தொகை அளவும் அதிகரிக்கப் பட்டு உள்ளது.

விவசாயத்தின் உட்கட்டமைப்பிற்காக ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யபட்டு உள்ளது, அதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அங்கு அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். விழாவில், கரும்பு இனப்பெருக்க அதிகாரிகள் மற்றும் தென்னை வாரிய அதிகாரிகள் இந்தி மற்றும் தமிழில் பேசினர். விழாவில் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், அமுல்கந்தசாமி மற்றும் பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தென்னை வாரியம், வேளாண் பல்கலைக் கழகம், கரும்பு இனப்பெருக்க நிலையத்தை சேர்ந்தவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.