துணிக்கடையில் கொள்ளை முயற்சி

0
14

கோவை; காந்திபுரம் பகுதியில் பூட்டி இருந்த துணிக்கடையை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை, சத்தி ரோடு பி.கே.ஆர்., நகரை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்,51. இவர் காந்திபுரம் பகுதியில் ‘குக்கும்பர் கிட்ஸ்வேர்’ பெயரில், துணிக்கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன் பின்னர், மர்ம நபர்கள் அவரின் கடை பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். கடையில் எதுவும் கிடைக்காததால் திரும்பிச்சென்றனர்.

நேற்று முன் தினம், சந்தோஷ்குமார் காட்டூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.