துடியலூர் அருகே புதிய வீட்டில் திருடியவர் கைது

0
5

பெ.நா.பாளையம்.ஜன.23:கோவை துடியலூர் அருகே உள்ள பன்னீர்மடை பாரி நகரில் லாரன்ஸ் என்பவர் புதிதாக வீடு கட்டி விற்பனை செய்து வருகின்றார். இந்த பகுதிக்கு நேற்று முன்தினம் மதியம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் ஒரு வீட்டிற்குள் சென்று அங்கு இருந்த எலக்ட்ரிக் பொருட்களை திருடி எடுத்துத் கொண்டு வெளியே வந்தார். அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பார்த்து அவரை பிடித்து தடாகம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆர்எஸ்புரம் அருணாசலம் நகரை சேர்ந்த ராஜேஷ்குமார்(38) என்பதும் இவர் மீது ஏற்கனவே பீளமேடு,சரவணம்பட்டி ,மதுக்கரை ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. ராஜேஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்த தடாகம் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.