திறந்தவெளி சிறையில் நீதிபதி ஆய்வு ,

0
24

கோவை; கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி ரமேஷ், ஒண்டிப்புதுார் திறந்த வெளிச்சிறையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தங்குமிடம், குளியலறை, சமையற்கூடம் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்ட அவர், சிறை வாசிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார். தண்டனை சிறைவாசிகளிடம், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செய்யப்படும் சட்ட உதவிகள் குறித்து எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, பொள்ளாச்சி கிளை சிறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, சிறை கைதிகளுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.