திருப்பூரில் அதிகரித்த ‘கஞ்சா ‘ புழக்கம் 60 கிலோ பறிமுதல்: 17 பேர் கைது

0
5

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. மார்ச் மாதத்தில் மட்டும், 17 பேர் கைது செய்யப்பட்டு, 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் நகரமான திருப்பூரில் சமீப காலமாக கஞ்சா, குட்கா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை வஸ்துக்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்கள் போதைக்கு அடிமையாகி வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்தவும், விற்பனை செய்பவர்களை கண்டறியவும் போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர்.

ஆனால், புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. கஞ்சா கும்பல்கள் ரயில், பஸ் போன்ற பொது போக்குவரத்து மூலமாக எளிதாக நகருக்குள் கடத்தி வருகின்றனர். போலீசார் கண்காணிப்பையும் மீறி சப்ளை செய்கின்றனர். இதனை கட்டுப்படுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

இந்த மார்ச் மாதத்தில் மட்டும் திருப்பூர் மாநகர், புறநகர் பகுதிகளில், விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட, 60 கிலோ கஞ்சா பிடிபட்டது. இது தொடர்பாக, 17 பேரை போலீசார் கைது செய்தனர். பெரும்பாலும் வட மாநிலத்தில் வரும் ரயில்களில் எளிதாக கஞ்சாவை கடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் பாதி பேர் பீகார், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இதுதவிர ஓட்டல்களில் போலீசார் சோதனைக்கு சென்ற போது, மெத்தபெட்டமைன், ஹெராயின், போதை மாத்திரை பயன்படுத்திய, 13 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

1.2 டன் ‘குட்கா’

கஞ்சா தவிர குட்கா பொருட்களின் விற்பனைக்கும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் கூட, கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி, திருப்பூருக்கு விற்பனை செய்ய தயாராக இருந்த, 1.2 டன் குட்கா பொருளை பல்லடம் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்டம், பட்டிராம்பட்டியை சேர்ந்த விஜய் கண்ணன், 34, என்பவரை கைது செய்த போலீசார், குட்கா மற்றும் ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.