திருப்புதல் தேர்வை வேலை நாளுக்கு மாற்ற கோரிக்கை

0
9

கோவை; தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கோவை வருவாய் மாவட்ட தலைவர் முகமது காஜா முகைதீன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அளித்த மனுவில், ‘வரும், 11ம் தேதி கோவை மாவட்டத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு தேர்வு கால அட்டவணையின்படி திருப்புதல் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அன்றைய தினம், வார விடுமுறையாக அறிவித்துள்ளது. வரும், 17ம் தேதி அன்று விடுமுறையாகவும், அதற்கு ஈடு செய்யும் விதமாக வரும், 25ம் தேதி வேலை நாளாகவும் அரசு அறிவித்துள்ளது.

இதனால், வரும், 11ம் தேதி அன்று வைக்கப்பட்டுள்ள தேர்வை, அரசு அறிவித்த வேலை நாளில் மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.