திருச்சி, சேலம் செல்லும் பயணிகளுக்காக பொங்கல் பண்டிகைக்கு 430 சிறப்பு பஸ்கள்

0
106

பொங்கல் பண்டிகையையொட்டி கோவை காந்திபுரம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சேலத்துக்கும், சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சிக்கும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

ஆனால் அங்கு பஸ்களை நிறுத்த போதிய இடம் இல்லாததால் சேலம் பஸ்கள் காந்திபுரம் நஞ்சப்பா சாலையிலும் திருச்சி பஸ்கள் சிங்காநல்லூர் காமராஜர் சாலையிலும் நிறுத்தப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை கூட்ட நெரிசலை சமாளிப்ப தற்காக சேலத்துக்கு 230 பஸ்களும், திருச்சிக்கு 200 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி வருகிற 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை கோவை கொடிசியா மைதானத்தில் இருந்து சேலம். திருச்சி மார்க்கமாக செல்லும் சாதாரண மற்றும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
மேலும் காந்திபுரம் மத்திய பஸ் நிலையம் மற்றும் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து கொடிசியா மைதானத்துக்கு செல்ல இணைப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
எனவே கொடிசியா மைதானத்தில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, நிழற்குடை வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே கொண்டாட வெளியூர் செல்லும் பயணிகள் அனைவரும் வருகிற 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை கொடிசியா மைதானத்துக்கு சென்று தாங்கள் செல்லும் ஊருக்கான பஸ்களில் புறப்பட்டு செல்லலாம்.
இந்த தகவலை கோவை அரசு போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.