திமுக சார்பில் நலத்திட்ட உதவி தியாகி என். ஜி. ராமசாமி 113- வது பிறந்தநாள் விழா

0
8

கோவை, மார்ச் 12: கோவை ராமநாதபுரத்தில் உள்ள தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தில் தியாகி என்.ஜி ராமசாமி 113வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. சங்கத்தின் தலைவர் கோவை செல்வன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். முன்னதாக, சிங்காநல்லூரில் உள்ள தியாகி என்.ஜி. ராமசாமி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், உப தலைவர்கள் வெங்கிடுசாமி, மணி, பொதுச்செயலாளர் பாலசுந்தரம், ஆறுச்சாமி, செயலாளர் கே.ஆறுச்சாமி, நாகராஜன், ராமன், அமைப்புசாரா தொழிலாளர் சங்க தலைவர் முருகானந்தம், செயலாளர் பரத்ராஜ், கணேசன், பொருளாளர் மாணிக்கம், எல்எம்சி கிளை தனபாலன், செயற்குழு உறுப்பினர் ராகவன், சிங்கை செல்வராஜ், சிவாஜி ராஜன், பார்தீபன், பூபேந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.