தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு: முதல்-அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

0
94

புதுடெல்லி,

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஊழல் மலிந்துவிட்டது. துணை முதல்-அமைச்சர் மற்றும் மிக முக்கியமான பொறுப்பு வகிக்கும் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பதவி வகிக்க தகுதியற்றவர்கள் ஆவார். எனவே, இந்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கை பற்றி தமிழக முதல்-அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடவேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.