கோவை,; தமிழகத்தில் மட்டுமா பாலியல் வன்கொடுமை நடக்கிறது என்று அமைச்சர் துரைமுருகனின் ஆணவ பேச்சுக்கு பா.ஜ., மாநில பொருளாளர் எஸ். ஆர். சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:
தமிழகத்தில் மட்டுமா பாலியல் வன்கொடுமை நடக்கிறது.
டில்லி, கொல்கத்தா, மும்பை போன்ற நகரங்களில் இது நடக்கவில்லையா என்று கிடுக்கிப்பிடி கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு தமிழக சட்டசபையின் மாண்பையே அமைச்சர் துரைமுருகன் குலைத்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர் துரைமுருகன்.
தமிழ்நாட்டில் மட்டும் பாலியல் வன்கொடுமை நடக்கவில்லை, ஆனால் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம்பெண் புகார் அளித்து பதிவான எப்.ஐ. ஆர்.,லீக் ஆனது தமிழகத்தில் மட்டும் தான்.
புகார் கொடுத்த குடும்பத்துக்கே போலீஸ்துறை மூலம் தொல்லை கொடுப்பது தமிழகத்தில் மட்டும் தான். மாநிலத்தையே உலுக்கிய சம்பவத்திற்கு தமிழக முதலமைச்சர் வெகு நாட்கள் வாய் திறக்காமல் இருந்ததும் தமிழ்நாட்டில் மட்டும் தான்!
எல்லாவற்றையும் விட,எல்லா மாநிலத்திலும் நடப்பதால் பாலியல் தொல்லை ஒரு பெரிய பிரச்னை இல்லை என்று சட்டசபையில் பேசி மக்களை சிறுமைப்படுத்து
தமிழகத்தில் மட்டும் தான்.
அரசு கொடுக்கும் 1,000 ரூபாயை வாங்கிக் கொண்டு கல்லூரி மாணவிகள் செல்போன் வாங்கி நைசாக பேசிக் கொள்ளுங்கள் என்று தமிழக அமைச்சர் பொறுப்பின்றி பேசுவதும் தமிழகத்தில் மட்டும் தான்இது மாதிரி மக்களை சிறுமைப்படுத்தும் அவமானப்படுத்தும் ஆட்சி கலைய போவதும், காணாமல் போகப் போகும் மாநிலமும் தமிழ்நாடு தான். பொறுத்திருந்து பாருங்கள். இவ்வாறு எஸ்.ஆர்.சேகர் கூறியுள்ளார்.