தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை

0
94

75-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படு கிறது. இதையொட்டி வீடுகளில் 3 நாட்கள் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடலாம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சுதந்திர தின விழா நெருங்கி வரும் நிலையில் தேசியக்கொடி விற்பனை மற்றும் தயாரிப்பு கோவையில் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் ஆர்.எஸ்.புரம், குட்ஷெட் ரோடு தலைமை தபால் நிலையம் உள்பட கோவையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பளபளக்கும் துணியில் தைக்கப்பட்ட தேசியக்கொடி ரூ.25-க்கு விற்கப்படுகிறது. அதை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல் கின்றனர்.

சுதந்திர தினம் வரை அனைத்து தபால் நிலையங்களி லும் தேசியக்கொடி விற்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.