கோவை : கோவை, விளாங்குறிச்சியைச் சேர்ந்தவர் ஹரிகருஷ்ணன், 53; தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப மேலாளர். இவர் ஆன்லைன் வாயிலாக, பங்குச்சந்தைக்கான வாட்ஸ்அப் குரூப்பில் வந்த அழைப்பை பார்த்து, அதில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டார். அவர்கள், இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்தனர்.
இதை நம்பிய ஹரி கிருஷ்ணன், பல்வேறு தவணைகளில் ரூ.32 லட்சத்தை முதலீடு செய்தார். ஆனால், அதற்குரிய லாபத் தொகையை எடுக்க முயன்ற போது அதை எடுக்க முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஹரிகிருஷ்ணன், இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றன