சர்ச்சை பேச்சால் தொடர் அடிவாங்கும் BJP …
நடிகை சோனாலி பிந்த்ரே மரணம் என்று ட்விட்டரில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார் மும்பையைச் சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ராம் கதம்.
புற்றுநோயால் அவதிப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நடிகை இறந்து விட்டதாக நினைத்துக் கொண்ட ராம் கதம், சோனாலி பிந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மறைவுக்கு எனது இரங்கலைத் தெரிவிக்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது.
கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், உடனடியாக தனது பதிவை நீக்கிய அவர், நடிகை சோனாலி பிந்த்ரே குறித்து வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவரின் ஆரோக்கியமான உடல்நிலயை பெறவும், விரைவில் குணமடையவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் என மற்றொரு ட்விட்டர் பதிவை இட்டுள்ளார்.பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ராம் கதம் சமீபத்தில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது நடந்த உறியடி விழாவில் இளைஞர்கள் விரும்பும் பெண்களை கடத்தி ஒப்படைப்பதாக கூறியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் மீண்டும் நெட்டிசன்களுக்கு தீனி போட்டுள்ளார்.