டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்க நடவடிக்கை

0
84

பொள்ளாச்சியில் டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பைகளை அகற்றும் பணி

பொள்ளாச்சி பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகி றது. இதன் காரணமாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மழைநீரில் கொசுப் புழு உற்பத்தியாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நகரில் ரோட்டோரங்களில் கிடக்கும் காலி பிளாஸ் டிக் பாட்டில்கள், குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்று வருகி றது. இந்த பணிகளை நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ் ணன், ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

கொசுப்புழு ஒழிப்பு

தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதால் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. நக ராட்சி பகுதியில் தற்போது யாருக்கும் டெங்கு பாதிப்பு இல்லை. ஒரு சிலருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், டயர்கள் போன்ற பொருட்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. வீடுகள், வணிக நிறுவனங்களிலும் கொசுப்புழு உற்பத்தியாவதை தடுக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்

வீடுகளில் கொசுப்புழு ஒழிப்பு பணிக்கு வரும் பணியாளர்க ளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். லேசான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

சுயமாக மருந்து வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் வகையில் பழைய பொருட்க க்ளை போட்டு வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.