டெங்கு காய்ச்சலுக்கு ஆறு பேர் சிகிச்சை

0
14

கோவை; கோவை அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலுக்கு, 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுவாக பருவமழை காலங்களில், டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்படும். கடந்த சில தினங்களாக கோவையில் மழை பொழிவு பெரிதாக பதிவாகவில்லை. அதனால் டெங்கு பாதிப்புகள் குறைந்துள்ளன. கோவை அரசு மருத்துவமனையில், காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வந்த, ஆறு பேருக்கு, டெங்கு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக, டீன் நிர்மலா தெரிவித்தார்