டஸ்காட்டிக்ஸ் கோல்ப் போட்டியில் அணி வெற்றி

0
12

கோவை, டிச. 11: கோவை செட்டிப்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டத்திற்கு நிதி திரட்டும் வகையில் சேரிட்டி கோப்பை கோல்ப் விளையாட்டு போட்டி நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு வழங்கும் விதமாக பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செஷாயர் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளை, கோவை கோல்ப் கிளப்புடன் இணைந்து போட்டியை நடத்தியது.
இரண்டாவது சீசனாக நடைபெற்ற போட்டியில் 96 கோல்ப் வீரர்கள் 4 அணிகளாக கலந்து கொண்டனர்.

இதன் இறுதி போட்டியில், டஸ்காட்டிக்ஸ் அணி 21 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இரண்டாம் இடத்தை ஷார்ப் ஷூட்டர்ஸ் அணி பிடித்தது. வெற்றி பெற்ற அணிக்கு செஷாயர் அறக்கட்டளை துணை தலைவர் நரேன், கோவை கோல்ப் கிளப் தலைவர் கோபிநாத் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் சேரிட்டி கோப்பை கோல்ப் போட்டிகள் நடத்த திட்டமிட்டு உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்