கோவை; பீளமேடு பகுதியில் ஜெகன்நாத் புராப்பர்டீஸ் சார்பில், ‘வேதாந்தா’ எனும் பிரீமியம் அபார்ட்மென்ட்கள் விற்பனை, நேற்று துவங்கியது.
பீளமேடு, பி.கே.டி.நகரில், 2.3 ஏக்கர் பரப்பளவில், 290 பிளாட்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், 1, 2, 3 பி.எச்.கே., வீடுகள் பல்வேறு அம்சங்களுடன் அமைக்கப்பட்டு வருகின்றன.
இக்குடியிருப்புகளுக்கான விற்பனை, நேற்று துவங்கப்பட்டது. ஜெகன்நாத் புராப்பர்டீஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ் திபெர்வால், இயக்குனர்கள் சதீஸ் மிட்டல், கோபால் மஸ்கரா, அனுராக் திபெர்வால் உள்ளிட்டோர், குத்து விளக்கு ஏற்றி விற்பனையை துவக்கி வைத்தனர்.
பொது மேலாளர் கங்கா ரத்னா கூறுகையில், ”2.3 ஏக்கரில், 290 பிளாட்கள் கட்டப்பட்டு வருகின்றன. சொந்த வீடு கனவை பூர்த்திசெய்யும் வகையில், குடியிருப்புகளை தரமாக கட்டியுள்ளோம்,” என்றார்.