செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க வந்த வீரர்கள்

0
75

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர்பாயிண்ட்ஸ் ஷெரட்டன் நட்சத்திர விடுதி வளாகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடக்கிறது. போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள்.

இந்த செஸ் திருவிழாவில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் சென்னைக்கு வருகை தர தொடங்கி இருக்கிறார்கள்.முதல் அணியாக ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த மடகாஸ்கர் தீவை சேர்ந்த வீரர்கள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நடுவர்கள் 90 பேர் மாமல்லபுரத்திற்கு வருகை தந்துள்ளனர்.

செஸ் போட்டிகளை எவ்வாறு நடத்துவது என்பது பற்றி ஆலோசனை நடத்த உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முதன்மை நடுவராக லாரன்ட் ப்ரைட் வந்துள்ளார். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்க உருகுவே, நைஜீரியா நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் சென்னை வந்தனர். அவர்கள், சென்னை விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ‘தம்பி’ சின்னத்துடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.