கோவை, நவ. 29: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியை சேர்ந்த எம்.கிருஷ்ணமூர்த்தி (60) கோவையில் நேற்று முன்தினம் இரவு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தில் மரணம் அடைந்த செய்தி கேட்டு, மிகவும் அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
மாநகராட்சி 56வது வார்டு கவுன்சிலராகவும், கட்சியின் விவசாய பிரிவு மாநில துணை தலைவராகவும் திறம்பட செயல்பட்டு வந்தார். அவரது மறைவு, குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு இரங்கல் செய்தில் கூறியுள்ளார்.