சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயிலில் வந்த பயணியிடம் மயக்கமருந்து ஸ்பிரே அடித்து 20 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திரா காக்கிநாடாவிலிருந்து சென்னை எழும்பூர் வந்த சர்க்கார் விரைவு ரயிலில் வந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுக்கு மர்ம நபர்கள் மயக்கமருந்து ஸ்பிரே அடித்து அப்பெண்ணிடம் இருந்து 20 சவரன் நகையை கொல்லையடித்து சென்றுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு சர்க்கார் விரைவு ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்த விஜயலட்சுமி கணவர் மற்றும் சகபயணிகள் விஜயலட்சுமி மயக்கமடைந்திருப்பதை கண்டறிந்த பின்னர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதன் பின் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மயக்கமருந்து ஸ்பிரே அடிக்கப்பட்டு 20 சவரன் பறிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.