பால் வியாபாரி
சுல்தான்பேட்டை ஒன்றியம் பூராண்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் திருமலைசாமி (வயது 80). பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி ராஜாமணி (வயது 65). உடல்நலக்குறைவாக இருந்து வந்த ராஜாமணி நேற்று காலை 6.30 மணியளவில் திடீரென உயிரிழந்தார்.
மனைவி உயிரிழந்ததால் திருமலைசாமி மிகவும் வேதனை அடைந்தார். இந்த நிலையில், காலை 10.30 மணிக்கு இருக்கையில் அமர்ந்து இருந்த திருமலைசாமியும் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்தார்.
இணைபிரியாத தம்பதி
ஒரே நாளில் சில மணிநேரத்தில் இத்துயர சம்பவம் அரங்கேறியது. சாவிலும் இணைபிரியாத தம்பதி குறித்து அறிந்ததும் உறவினர்களை கண்கலங்க செய்ததுடன் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இருவரின் உடலும் நேற்று பூராண்டாம் பாளையம் சுடுகாட்டில் அருகே, அருகே தகனம் செய்யப்பட்டது. இறந்துபோன தம்பதியினருக்கு சிவக்குமார், பாலகுமார் என 2 மகன்கள் உள்ளனர்.