வால்பாறை; வார விடுமுறையில் வால்பாறையில் திரண்ட சுற்றுலாபயணியர், படகுசவாரியில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.
வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் வந்து செல்கின்றனர். அட்டகட்டி ஆர்க்கிட்டோரியம், டைகர் பால்ஸ், கவர்க்கல் வீயூ பாய்ண்ட், நல்லமுடி பூஞ்சோலை, சோலையாறு அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை, அவர்கள் கண்டு ரசிக்கின்றனர்.
பருவமழைக்கு பின், கடந்த சில நாட்களாக சாரல்மழை பெய்து வரும் நிலையில் குளு குளு சீசன் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலாபயணியர் அதிக அளவில் வால்பாறையில் திரண்டுள்ளனர். அவர்கள் படகுசவாரியில் பயணம் செய்தும், தாவரவியல்பூங்கா, மற்றும் நீர்வீழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர்