சுற்றுலா பயணியரை மகிழ்வித்த சாரல் மழை

0
6

வால்பாறை : சுற்றுலாபயணியரை மகிழ்விக்கும் வகையில் பெய்த சாரல்மழையால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

வால்பாறையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காலை, மாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் நிலவியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் விடிய, விடிய சாரல்மழை பெய்தது. எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் பொங்கல் திருவிழா களை கட்டியுள்ள நிலையில், வால்பாறையை குளிர்விக்கும் வகையில் பெய்த சாரல்மழையினால், உள்ளூர் மக்களும், சுற்றுலாபயணியர் மகிழ்ச்சியடைந்தனர்.