சுனிதா வில்லியம்ஸ் வருகை; கோவையில் பெண்கள் பூஜை

0
4

கோவை; சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்து பத்திரமாக திரும்பியதற்கு, நன்றி தெரிவிக்கும் விதமாக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது

கடந்த ஒன்பது மாதங்களாக, சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த, விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சக வீரர்களுடன் நேற்று முன்தினம் அதிகாலை பூமிக்கு அழைத்து வரப்பட்டார்.

அவர் பத்திரமாக பூமி திரும்பியதை, வடகோவையில் உள்ள குஜராத் சமாஜில் வடமாநில பெண்கள் பலரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

குஜராத்தி சமாஜ் பெண்கள் பிரிவு செயலாளர் பல்லவி கூறுகையில், ”இது மிகவும் மகிழ்ச்சிகரமான தருணம். அவர் விண்வெளி சென்று, வெற்றிகரமாக திரும்பி உள்ளார். இந்தியராக பெருமை கொள்ளும் தருணம் இது,” என்றார்.

குஜராத்தி சமாஜ் செயலாளர் ராஜேஷ் மோதி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.