சுத்திகரிப்பு நிலையம் கட்ட மக்கள் எதிர்ப்பு

0
24

கோவை; கோவை, கவுண்டம்பாளையம் எருக் கம்பெனி பகுதியில் குப்பை கிடங்கு இருந்தது; மலைக்குன்று போல் தினமும் டன் கணக்கில் குப்பை கொட்டியதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது.

பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, வெள்ளலுார் கழிவு நீர் பண்ணைக்கு குப்பை கிடங்கு மாற்றப்பட்டது.

இப்போது, பாதாள சாக்கடை திட்டத்துக்காக ஜீவா நகர் அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ‘பம்ப்பிங் ஸ்டேஷன்’ ஆகியவை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கட்டப்படுகிறது. இதற்கு, கே.கே.புதுாரை சேர்ந்த, 33, 34 மற்றும், 44, 45வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது, ”வடவள்ளி – வீரகேரளம் பகுதிக்கான சுத்திகரிப்பு நிலையம் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கட்டப்படுகிறது. பொதுமக்களை சமரசம் செய்து கட்ட வேண்டும். ஸ்ரீராம் நகரில் இதேபோல் பிரச்னை வந்தது; அவர்களிடம் பேசியதும் அனுமதி அளித்தனர்; தற்போது கட்டி வருகிறோம். திட்டம் தொடர்பாக அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் கூறி, தீர்வு ஏற்படுத்துவோம்,” என்றார்