சீனாவில் அலுவலகத்தில் தூங்கலாம்: அலுவலர் மகிழ்ச்சி

0
122

பெய்ஜிங்க்: சீனாவில் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் காலை 11 மணியிலிருந்து 1 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும், நிதானமாக சென்று சாப்பிட்டு வரலாம். வந்ததும், ஒரு குட்டித் துாக்கமும் போடலாம். இந்த துாக்கத்தை நிர்வாகம் வரவேற்கிறது. மேனேஜரும், ”ஏன் துாங்கினீர்கள்” என கேள்வி கேட்க மாட்டர். பிற்பகல் ஒரு குட்டி துாக்கம் போட்டு விட்டு வேலை செய்வதன் மூலம், உற்பத்தித் திறனை கூட்ட இயலும், என்பது சீனர்களின் நம்பிக்கை. நம்மில், பலர் வேலை பளு காரணமாக, பிற்பகல் உணவையே கைவிடுவதை பார்த்திருப்போம். ஆனால் சீனாவில் பிற்பகல் சாப்பாடு ரொம்ப அவசியம். எவ்வளவு வேலை இருந்தாலும், சாப்பிட்டுவிட்டுதான், மீதி வேலையை தொடருவர். இதனால் அலுவலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.