சீசன் டிக்கெட் எடுத்து மெமு ரெயிலில் பயணிக்கலாம்

0
95

மெமு ரெயில்

கோவையில் இருந்து திருப்பூர், கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் தொழிலாளர்கள் உள்பட பலர் வேலை காரணமாக சென்று வருகின்றனர். இதற்கு பலரும் அரசு பஸ்கள் மற்றும் சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவையில் இருந்து அருகில் உள்ள நகரங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் மெமு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

மேட்டுப்பாளையம்

கொரோனா தாக்கத்துக்கு பின்னர் கோவையில் இருந்து மெமு ரெயில் (தொடர்ரெயில்) சேவை தொடங்கி உள்ளது. இந்த ரெயில்கள் மூலம் கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று திரும்ப முடியும்.

குறிப்பாக மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த வழியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டுனர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு சென்று வர முடியாத நிலை உள்ளது.

சீசன் டிக்கெட்
எனவே கோவை- மேட்டுப்பாளையம் மெமு ரெயிலை பொது மக்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதனால் இந்த ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது.மெமு ரெயிலில் தினமும் பயணிக்க வசதியாக சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது. அந்த சீசன் டிக்கெட்டுகளை யூடிஎஸ் செயலி மூலம் பெறலாம். மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள தானியங்கி டிக்கெட் விற்பனை எந்திரம் (ஏ.டி.வி.எம்) மூலமும், டிக்கெட் கவுண்ட்டர்களிலும் வாங்கிக் கொள்ளலாம்.

குறைந்த கட்டணம்

எனவே மெமு ரெயில்களில் சீசன் டிக்கெட் எடுப்பதன் மூலம் குறைந்த செலவில் தாங்கள் வேலை செய்யும் இடங்களுக்கு தொழிலாளர்கள் எளிதாக சென்று வரலாம். இதன் மூலம் அவர் களுக்கு நேரமும், பணமும் மிச்சமாகும். அதோடு நகரங்களில் நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.