சி.எம்.எஸ்., கல்லுாரியில் பொறியியல் மாநாடு

0
3

குமிட்டிபதி, சி.எம்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், ‘பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பன்முகக் கண்ணோட்டங்கள்’ என்ற, இரண்டாவது சர்வதேச மாநாடு நடந்தது.

மஸ்கட் தொழில்நுட்பம் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலையின் பேராசிரியர் கார்த்திகேயன் தங்கவேல் தலைமை விருந்தினராக பங்கேற்று, 6 ஜி தொழில்நுட்பம் குறித்த முக்கிய உரையை நிகழ்த்தினார்.

மாநாட்டில் தொழில் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர்.

210 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில், 58 கட்டுரைகள் விளக்கக்காட்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.

கல்லுாரியின் முதல்வர் சுதா, பேராசிரியர்கள் ரெக்ஸீனா, தனலட்சுமி, விபின் உள்பட பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.