சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு பயிற்சி நிறைவு

0
83

கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர்நாயக்கன்பாளையம் சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியில் 93-வது உதவி ஆய்வாளர்கள் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இவர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்துகொண்டு கோவை சி.ஆர்.பி.எப் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். இவர்கள்உதவி ஆய்வாளர்கள் பயிற்சியில் தேர்ச்சி பெற்று நேரடியாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இந்த விழாவில் கோவை சி.ஆர்.பி.எப் முதல்வர் மற்றும் ஐ.ஜி.சதீஷ் சந்திர வர்மா கலந்து கொண்டு பயிற்சி முடித்த உதவி ஆய்வாளர்கள் 113 பேர்களுக்கு பேட்சு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக வீரர்களின் மரியாதையை சி.ஆர்.பி.எப் முதல்வர் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து தேசிய கொடி மற்றும் சி.ஆர்.பி.எப் கொடிக்கு வீரர்கள் மரியாதை செலுத்திவிட்டு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

இவர்களுக்கு இந்தியாவிற்கு அச்சுறுத்தப்படும் உலக பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு பாடத்திட்டங்கள், அவற்றை எப்படி சாத்துரித்தியமாக கையாளுவது போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பைக் சாகசம், சிலம்பம், நிஞ்சாக் உள்ளிட்ட சாகச கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இறுதியில் அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கு பேட்சுகள் குத்தப்பட்டன. அப்போது அவர்களது குடும்பத்தினர் ஒன்றாக நின்று அவர்களுடன் போட்டோ, வீடியோ எடுத்துக்கொண்டனர். இதில் கமெண்டண்ட் ராஜேஷ்குமார், அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.