சிறையில் இருந்து 12 கைதிகள் விடுதலை

0
89

12 பேர் விடுதலை

அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழ்நாட்டில் சிறைகளில் உள்ள கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் ஆண்டுதோறும் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

இதன்படி நேற்று மாநிலம் முழுவதிலும் பல்வேறு சிறைகளில் இருந்து கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். கோவை மத்திய சிறையில் 2 ஆயிரம் கைதிகள் உள்ளனர். குறைந்தபட்சம் 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி கோவை சிறையில் 12 முதல் 14 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த 12 கைதிகள்விடுதலை செய்யப்பட்டனர். கோவை மத்திய சிறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் மேற்பார்வையில், சிறை சூப்பிரண்டு ஊர்மிளா, கூடுதல் சூப்பிரண்டு சதீஷ்குமார், ஜெயிலர் சிவராஜன் ஆகியோர் இந்த கைதிகளை விடுதலை செய்தனர்.

மறுவாழ்வு

கைதிகளிடம் நன்னெறி புத்தகங்களும் வழங்கப்பட்டன. விடுதலை செய்யப்பட்ட கைதிகள் மறுவாழ்வுக்காக தொழில் தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

“தாங்கள் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், மனம் திருந்தி மறுவாழ்வு வாழப்போவதாகவும் கைதிகள்கூறினர்.பின்னர் அவர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.