சிறுவாணியிலும் சாரல் மழை

0
49

கோவை,; சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும், சாரல் மழையே பதிவாகியிருக்கிறது. நீர் மட்டம், 42.28 அடியாக உள்ளது.

கோவை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் காலை முதல் மாலை வரை, ஆங்காங்கே மழைப்பொழிவு காணப்பட்டது.

வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஓரிடத்தில் சாரல் மழை பெய்தது; மற்றொரு இடத்தில் மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது. கன மழையாக இல்லாமல் சாரலாக பெய்ததால், பொதுமக்களின் சகஜ வாழ்க்கையை பாதிக்கவில்லை.

கோவை மாநகராட்சி பகுதிக்கும், வழியோர கிராமப் பகுதிகளுக்கும், முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும், துாறல் மழையே பதிவாகியிருக்கிறது.

அணை பகுதியில், 6 மி.மீ., அடிவாரத்தில், 10 மி.மீ., பதிவானது. 42.28 அடியாக நீர் மட்டம் இருக்கிறது. குடிநீர் தேவைக்காக, 8.16 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.