மேட்டுப்பாளையம்; சிறுமுகை அருகே கார் மரத்தில் மோதி, இரண்டு ஐயப்ப பக்தர்கள் இறந்தனர். கர்நாடகா மாநிலம், கொள்ளேகால் சாம்ராஜ் நகரை சேர்ந்த நாகராஜ், 58, வெங்கடாதிரி, 62, மகேஷ் குமார், 44, துரைசாமி, 61, சாமி, 40 ஆகிய ஐந்து ஐயப்ப பக்தர்கள், இண்டிகா காரில், சபரிமலைக்கு சென்றுள்ளனர். சுவாமியை வழிபட்ட பின் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கோவை மாவட்டம், சிறுமுகை அருகே சத்தி மெயின் ரோட்டில், இன்று காலை, 5:45 மணிக்கு கோவில் மேடு, பால்காரன் சாலை என்னும் இடத்தில் கார் சென்று கொண்டிருந்தது. காரை சாமி, ஓட்டிச் சென்றார்.
டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால், ரோட்டின் ஓரத்தில் இருந்து புளிய மரத்தில் கார் மோதியது. இதில் காரில் பயணம் செய்த நாகராஜ், வெங்கடாதிரி ஆகிய இரண்டு ஐயப்ப பக்தர்கள் இறந்தனர். காயமடைந்த மகேஷ் குமார், துரைசாமி, சாமி ஆகியோர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்