சிறுமியுடன் விளையாடிய நபரை ஆட்டோவில் கூட்டி சென்று அடி

0
6

ஆர்.எஸ்.புரம் பகுதியில் சிறுமியுடன் விளையாடிய நபரை, ஆட்டோவில் அழைத்து சென்று தாக்கிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை, கவுண்டம்பாளையம், ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், 35. இவர் குடும்பத்துடன் ஹவுசிங் யூனிட்டில் வசித்து வருகிறார்.

இவர், கடந்த 3ம் தேதி காமராஜபுரம், ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள, ஆட்டோ ஸ்டாண்டுக்கு சென்றார். அப்போது, அங்கு ஒரு ஆறு வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்தார்.

சிறுமியுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதைப்பார்த்த காமராஜபுரத்தை சேர்ந்த ஜெயபால், 41, சபரி, 28, அரவிந்த், 30 மற்றும் பிரித்விராஜ், 30 ஆகியோர் விக்னேசை பின்தொடர்ந்து சென்றனர்.

விக்னேசிடம் பேச வேண்டும் எனக்கூறி, அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, காமராஜபுரம் பகுதிக்கு அழைத்து வந்தனர். பின்னர், சிறுமியுடன் விளையாடியது குறித்து கேள்வி எழுப்பி, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர்.

விக்னேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆர்.எஸ் புரம் போலீசில் விக்னேஷ் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, நான்கு பேரையும் கைது செய்தனர்.