சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு

0
74

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட நேரு நகர் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட ஷாஜகான் (வயது 31), சாகுல் அமீது (25) ஆகியோரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலகணேஷ் தலைமையிலான போலீஸ்காரர்கள் சுகுமார், கதிர், வெங்கடேஷ் பிரபு ஆகியோர் கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து 5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஜமீன்காளியாபுரத்தில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திருமலைசாமி, போலீஸ்காரர்கள் கார்த்திக், நாகராஜ், விஷ்ணு பிரசாத் ஆகியோர் உதவியாக இருந்தனர். இந்தநிலையில் மேற்கண்ட இரு வழக்குகளிலும் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.