சினிமாவை கெடுக்கும் கருப்பு ஆடுகள்- சமந்தா ஓபன் டாக்!

0
142

மதுரையில், நேற்று நடைபெற்ற மொபைல் கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு நடிகை சமந்தா சென்றிருந்தார். அவரை காண ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரண்டனர். இதனால், அங்கு போக்குவரத்து சிறிது நேரம் ஸ்தம்பித்தது.

மொபைல் கடை திறந்து வைத்த சமந்தா, ரசிகர்கள்தான் எனக்கு எல்லாமே, ரசிகர்கள் இல்லையென்றால், திரையுலகில் எவராலும் சாதிக்க முடியாது. சினிமா துறையில் இருந்து சிலர் அரசியலுக்கு வருகின்றனர். அது நல்ல விஷயம் தான். அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளாக, தான் சினிமா துறையில் இருப்பதாகவும், இதுவரை பாலியல் ரீதியான எந்தவொரு தொல்லைகளையும் சந்திக்கவில்லை என்றும், சினிமாவில் உள்ள சில கருப்பு ஆடுகளால் பாலியல் தொல்லைகள் நடப்பதாகவும் இதனால், சினிமா துறைக்கே கெட்ட பெயர் விளைவதாகவும் தெரிவித்தார்.

பின்னர், மொபைல் கடை நடத்திய போட்டியில், வெற்றிப் பெற்ற சிலருக்கு புதிய ரக ஸ்மார்ட்போன்களை சமந்தா பரிசாக வழங்கினார்.