சித்திரை மாத அமாவாசை கோவில்களில் சிறப்பு பூஜை

0
3

சித்திரை மாத அமாவாசையை ஒட்டி, சூலுார் வட்டார கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

சித்திரை மாத அமாவாசையை ஒட்டி, சூலுார் வட்டாரத்தில், சூலுார் சிவன் கோவில், அத்தனூர் அம்மன் கோவில், மேற்கு அங்காளம்மன், வடக்கு மாகாளியம்மன், அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவன் கோவில்களில் நேற்று முன்தினம் மாலை, ராகு, கேது பெயர்ச்சி பூஜை நடந்தது. ராகு மற்றும் கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை, பரிகார ஹோமங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.