சிசிடிவி காமிரா பொருத்தாத வணிக வளாக உரிமங்கள் ரத்து : காவல்துறை

0
128

ணிக நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கண்காணிப்பு காமிரா பொருத்தாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை நகரில் பல வணிக நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. இந்த இடங்களில் திருட்டு நிகழ்வது. அதிகரித்து வருகிறது. அதை தடுக்க காவல்துறையினர் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

பல நேரங்களில் திருட்டு நடைபெறும் போது அங்குள்ள கண்காணிப்பு காமிரா பதிவின் மூலம் திருட்டில் சம்பந்தபட்டவர்களை காவல்துறை கண்டறிந்து கைது செய்து வருகிறது.

இதனால் காவல்துறை அனைத்து வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்புக் காமிரா பொருத்துமாறு பல முறை வேண்டுகோள் விடுத்தது. ஆனால் பெரும்பாலான இடங்களில் அவ்வாறு கண்காணிப்பு காமிரா பொருத்தப் படவிலை.

இதை ஒட்டி காவல்துறை ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளது.

அந்த உத்தரவில், “சென்னை பெருநகர சட்ட விதி 2012இன் படி அனைத்து வணிக நிறுவனங்களிலும், வணிக வளாகங்களிலும் கண்காணிப்பு காமிரா பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது. அப்படி பொருத்தாத நிறுவனங்கள் மற்றும் வளாகங்களின் வணிக உரிமம் ரத்து செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.