சாலை விபத்தில் மரணம் ‘முன்னாள் வன அலுவலர்

0
102

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நேரு நகரை சேர்ந்தவர் அமீர் ஹாஜா, 69; முன்னாள் மாவட்ட வன அலுவலராக பணிபுரிந்தவர். இவர் தனது ஸ்கூட்டரில், கோவை — மேட்டுப்பாளையம் சாலையில் குட்டையூர் அருகே நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். இவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு காரமடை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்பு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனில்லாமல் நேற்று அவர் இறந்துவிட்டார். காரமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.