கோவை, : கணபதி பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் 22 வயது பெண். இவர் கணபதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன், வேலை முடிந்து கணபதி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வெள்ளை நிற ஸ்கூட்டரில் வந்த நபர் ஒருவர், பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவர் சத்தம் போடவும், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பினார். அப்பெண், சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.