சர்வதேச பலுான் திருவிழா இன்று நிறைவு பெறுகிறது

0
6

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், ஒன்பதாவது சர்வதேச பலுான் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில், தமிழக சுற்றுலாத்துறை, குளோபல் மீடியா பாக்ஸ் சார்பில், 10வது தமிழ்நாடு சர்வதேச வெப்ப பலுான் திருவிழா நேற்றுமுன்தினம் துவங்கியது.அமெரிக்கா, தாய்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரியா, பிரான்ஸ், பிரேசில், வியாட்நாம், பெல்ஜியம் உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து, 12 பலுான்கள் வந்துள்ளன.

தொடர்ந்து காலையில் வானில் வெப்ப பலுான் பறக்கும் நிகழ்ச்சியும், மாலையில், பலுான்கள் நிலை நிறுத்தப்பட்டு காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

இரவு நேரங்களில் வெப்ப காற்றில் நிலை நிறுத்தப்படும் பலுான்கள் முன், சுற்றுலாப்பயணிகள், படம் எடுத்துக்கொள்கின்றனர். இந்த திருவிழா இன்று (16ம் தேதி) நிறைவு பெறுகிறது.

பொள்ளாச்சியில் நேற்றுமுன்தினம் வானில் பறக்கவிடப்பட்ட யானை வடிவிலான பலுான், பாலக்காடு கன்னிமாரி முள்ளந்தோட்டில் வயலில் இறங்கியது. பலுானில் இருந்தவர்கள் பாதுகாப்பாக இறக்கப்பட்டது.

பலுானில் பயணம் செய்தவர்கள் யாருக்கும் எந்த காயமும் இல்லை. காற்றின் வேகத்துக்கேற்ப பலுான் தரை இறங்கியதாக கூறப்படுகிறது. பின்னர், பலுான் சுருட்டி பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது.