சரவண சுந்தர் மாநகர போலீஸ் க மிஷனராக பொறுப்பேற்பு

0
11

கோவை; கோவை மாநகர போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர், நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்த பாலகிருஷ்ணன், சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் நிர்வாக பிரிவு ஐ.ஜி.,யாக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக, கோவை சரக டி.ஐ.ஜி.,யாக பணியாற்றி வந்த சரவண சுந்தர் பதவி உயர்வு பெற்று, மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று மாலை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய கமிஷனர் சரவண சுந்தர் கூறுகையில், ”24 மணி நேர, ரோந்து திட்டம் அமல்படுத்தப்படும். மாநகரில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, குற்ற தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு, ரவுடிகளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

போதைப்பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்க, நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். முக்கியமாக, முன்னாள் கமிஷனர் பாலகிருஷ்ணன் அமல்படுத்திய அனைத்து திட்டங்களும், சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்படும்,” என்றார்.