சமத்துவ பொங்கல்

0
6

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வடபுதுார் ஊராட்சியில், சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.

கிணத்துக்கடவு வடபுதுார் ஊராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதியில், முதலாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.

நிகழ்ச்சியில், பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. இதை தொடர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோலப்போட்டி, மியூசிக் சேர் மற்றும் பிற போட்டிகள் பொதுமக்கள் பலர் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில், பொதுமக்கள் திரளான கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன